அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில்(MetLife Stadium) நடைபெறும் 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேரில் பங்கேற்கிறார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து, அவர் உலகக் கோப்பை கோப்பையை வெற்றிபெறும் அணியிடம் வழங்குவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், அமெரிக்க வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான உலகக் கோப்பைத் தொடரின் நிறைவாக அதிபர் டிரம்ப் இதில் பங்கேற்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக 'சாம்பியன்ஷிப் மோதிரங்கள்' வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை நியூயார்க்கிலுள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில்இ ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் மோதவுள்ளன.
அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணியும், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன.
உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, தங்கப் பதக்கங்களுடன் வைரங்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக மோதிரங்களும் சாம்பியன் அணிக்கு வழங்கப்படவுள்ளன.
மொத்தம் 2,026 வரையறுக்கப்பட்ட பதிப்பு மோதிரங்களில், 30 மோதிரங்கள் சாம்பியன் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ரசிகர்களுக்காக வெளியிடப்படவுள்ளன.