2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த தமிழ்ப் படமாக தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த நடிகராக கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்) மற்றும் மம்மூட்டி (பிரமயுகம்) ஆகிய இருவரும் இந்த விருதை கூட்டாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது.
விருது வென்றவர்கள் பின்வருமாறு..
சிறந்த நடிகர்: மம்மூட்டி (பிரம்மயுகம்)
சிறந்த படம்: 'Article 370' 370'
சிறந்த இயக்குனர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த எடிட்டிங்: அமரன் (ஆர்.கலைவண்ணன்)
சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் (அமரன்)
சிறந்த பொழுதுபோக்கு படம்: 'Kalki 2898 AD'
சிறந்த திரைக்கதை: புஷ்பா 2
சிறந்த ஆடை வடிவமைப்பு: புஷ்பா 2
சிறந்த வசனம்: வெங்கி அட்லுரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த ஸ்டண்ட் choreography: மகாராஜா (அனல் அரசு)
ஸ்பெஷல் மென்ஷன்: கேப்டன் மில்லர்
ஸ்பெஷல் மென்ஷன் 2: மெய்யழகன்
சிறந்த தமிழ் படம்: ராயன்
சிறந்த Sound Design: Blue (Tamil)
சிறந்த துணை நடிகை: சாச்சனா (மகாராஜா)
Best feature film promoting National, social and environmental values: கேப்டன் மில்லர்
2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்கள் இந்த விருதுகளுக்காக பரிசீலிக்கப்பட்டன.