டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரட்டபெரியகுளம் வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரட்டபெரியகுளம் வீதியின் 16ஆம் கட்டை பகுதிக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பணி நிமித்தமான கடமைகளை முடித்துக்கொண்டு வவுனியா ஈரட்டபெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட், டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த, வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Bootstrap