ரூ. 4 கோடி கொக்கெய்னை விழுங்கி வந்த வெளிநாட்டுப் பெண் கைது!

ரூபாய் 4 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி, சக்கர நாற்காலியின் உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஆசிரியை ஒருவர் நேற்று (17) சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் ஒரு எச்.ஐ.வி (HIV) தொற்றாளர் என சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள இந்தச் சந்தேக நபர், அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியா மற்றும் கட்டார் ஊடாக இலங்கை வந்துள்ளார். சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கியிருந்த அவர், மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Bootstrap