3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணியுடன் ஹாலிவுட் நடிகை ஜெண்டயா

ஹாலிவுட் நடிகை ஜெண்டயா (The Odyssey)  லண்டனில் நடைபெற்ற தனது 'தி ஒடிஸி'  திரைப்பட விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தங்கக் காதணிகளை அணிந்து பங்கேற்றது தற்போது உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலப் பொருட்களை, பிரபலங்கள் தங்களின் ஆடை விபரங்களுக்காக  பயன்படுத்துவது கலாச்சாரச் சுரண்டல் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம், கடந்த காலங்களில் கிம் கர்தாஷியன் புகழ்பெற்ற மர்லின் மன்றோவின் ஆடையை அணிந்து சர்ச்சையில் சிக்கிய நிகழ்வோடு சமூக வலைத்தளங்களில் ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

 

Bootstrap