போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்

பிலியந்தலை – போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கையின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தின் போது மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Bootstrap