கனடாவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று

கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

வெளிநாடுகளில் (குறிப்பாக மெக்ஸிகோ போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில்) இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்படும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் மூலம் இது பரவுகிறது. முன்னைய காலங்களில் கீரை வகைகள் (Lettuce), கொத்தமல்லி , துளசி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பச்சையாக உண்ணும் உணவுகள் மூலம் இந்த ஒட்டுண்ணி பரவியுள்ளது.

மனிதக் கழிவுகள் கலந்த நீரைக் கொண்டு பயிர்களுக்குப் பாய்ச்சுவதாலும், கிருமி நீக்கம் செய்யப்படாத நீரைக் குடிப்பதாலும் இந்தத் தொற்று ஏற்படுவதாக அறவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.

தற்போது அமெரிக்காவில் இந்த கிருமி அதிக அளவில் பரவிவரும் நிலையில், தற்போது கனடாவின் பல பகுதிகளிலும் அது கண்டறியப்பட்டுள்ளது.

இருந்தாலும், அமெரிக்கத் தொற்றுக்கும் கனேடிய தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Bootstrap