உலகக்கோப்பை இறுதி போட்டியில் என்ன நடந்தாலும் சரி, அர்ஜென்டினா அணி யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத வரலாறு படைத்து விட்டது'' என அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் இன்றிரவு இலங்கை நேரப்படி 12.30 மணிக்கு மோத உள்ளன. இந்த சூழலில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது அணியில் குழு படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் மெஸ்ஸி கூறியிருப்பதாவது: இறுதிப் போட்டியில் என்ன நடந்தாலும் சரி, அர்ஜென்டினா அணி யாராலும் மறக்கவும் அழிக்கவும் முடியாத வரலாற்றை ஏற்கனவே படைத்துவிட்டது, அணியின் கடினமான தருணங்களில் அனைவரும் ஒன்றாக நின்று மீண்டு வந்தது மறக்க முடியாது.
இத்தனை ஆண்டுகளில் மிகச் சிறந்தது பட்டங்கள் மட்டுமல்ல, இந்த முழுப் பயணமும்தான். எனது ஒவ்வொரு அணி வீரர்களுக்கும், பயிற்சி ஊழியர்களுக்கும், இந்தத் தேசிய அணி ஒரு குடும்பமாகத் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய ஒவ்வொரு நாளும் உழைக்கும் அனைவருக்கும் நன்றி என மெஸ்ஸி கூறியுள்ளார்.