நெருப்பு மற்றும் மின்சாரத்தை விடவும், மனிதகுலம் இதுவரை உருவாக்கிய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமே என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் நெருப்பும், மின்சாரமும் ஏற்படுத்திய மாற்றங்களை விட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இன்னும் ஆழமான தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் திறன் மற்றும் அதன் எதிர்கால முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலேயே சுந்தர் பிச்சையின் இந்தக் கருத்துகள் அமைந்துள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன.