டார்கோவின் அணுமின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் அஹ்வாஸ் (Ahvaz) நகருக்கு அருகில் கட்டப்பட்டு வரும் டார்கோவ் (Darkhovin / Darquain) அணுமின் நிலையத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் நாட்டின் அணுசக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுஉலைக்கோ அல்லது கட்டுமானப் பகுதிகளுக்கோ பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும், கதிர்வீச்சு கசிவு போன்ற ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

'சர்வதேச சட்டங்களை மீறி, அடாவடித்தனமும் சட்டவிரோதமுமே தன் இயல்பாகக் கொண்ட பயங்கரவாத மற்றும் குற்றவாளி அமெரிக்க ஆட்சி, இந்த காட்டுமிராண்டித்தனமான ஆக்ரோஷமான செயலைச் செய்துள்ளது' என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அணுமின் நிலையமானது 'ஈரானிய தேசத்தின் கண்ணியத்திற்கும், அறிவியல் ரீதியான தன்னிறைவுக்கும் ஒரு குறியீடாகத் திகழ்கிறது' என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருகிறது.

Bootstrap