இலங்கையில் இதுவரை 20 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 4 மரணங்கள் புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன குறிப்பிட்டார்.
ஒரு சமூகமாக நமது சமூகப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியிருந்தால், டெங்கு மரணங்களைப் போன்று நீர்வெறுப்பு நோய் மரணங்களையும் தடுத்திருக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையில் பிரதானமாக நாய்கள் மூலமே இந்நோய் பரவுகிறது. அத்துடன் பூனை, கீரி, குள்ளநரி மற்றும் பெருச்சாளி போன்ற விலங்குகளினாலும் இது பரவக்கூடும்.