கனடாவின் அரச பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிரும்போது சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்க கூடுதல் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டின் தேசிய உளவுத்துறை கண்காணிப்பு அமைப்பு (NSIRA) அவசர எச்சரிக்கை மற்றும் பரிந்துரைகளை விடுத்துள்ளது.
சமீபத்திய பாதுகாப்பு நிலவரங்களின்படி, கனடாவின் பாதுகாப்புத் துறைக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களில், சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்த்தல் ,வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் தவறான நடத்தைகளில் பங்காளியாக இருப்பதைத் தவிர்க்கும் சட்டம் வெளிநாட்டு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்வதை அல்லது அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை பயன்படுத்துவதை தடை செய்கிறது.
குறிப்பாக, கனடாவின் வெளியுறவுத்துறை முறையான ஆவணங்களைப் பராமரிக்காததால், சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன்காரணமாக கனேடிய உளவுத்துறை , தேசிய பாதுகாப்புத் துறை , எல்லைப் பாதுகாப்பு மற்றும் RCMP ஆகிய நிறுவனங்கள் இணைந்து, வெளிநாட்டு அமைப்புகளுடனான தகவல் பகிர்வு முறைகள் குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கூட்டு உளவு அமைப்புகள் இணைந்து, அரசு கொள்கைகள் மற்றும் இராணுவ விவகாரங்களுடன் தொடர்புடைய நபர்களை இலக்கு வைத்து நடக்கும் அதிநவீன உளவு வேலைகள் குறித்து எச்சரித்துள்ளன. கனடாவின் மின்சாரம், நீர் விநியோகம், எரிசக்தி மற்றும் நிதி நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புகளை குறிவைத்து தீம்பொருள் மற்றும் ரான்சம்வேர் (Ransomware) தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக கனேடிய சைபர் பாதுகாப்பு மையம் எச்சரித்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிவேகமாகப் பாதுகாப்பு அரண்களை உடைத்து வருவதால், பாதுகாப்பு அமைப்புகள் தங்களது கணினி நெட்வொர்க்குகளை உடனடியாகப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கனேடிய உளவு அமைப்பான CSIS சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக நெருங்கி வரும் சில நாடுகள், கனடாவின் உள்விவகாரங்கள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் சட்டவிரோத உளவு மற்றும் ஆதிக்கச் செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக எச்சரித்துள்ளது.