ஈரானியப் புரட்சிகர காவல்துறை இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கா, ஈரானியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) இலக்குகள் மீது வான்வழியாக உக்கிரமான பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மற்றும் வட ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தீவிர வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈரான் நடத்திய பிந்திய தாக்குதல் ஒன்றில் வட ஈராக்கில் பணியாற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.

Bootstrap