கனவுடன் தொடங்கிய இறுதிப் போட்டி கண்ணீரில் முடிவு

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது வாழ்நாளின் இறுதி கால்பந்து தொடராகக் கருதப்பட்ட இதில், கிண்ணத்தை தக்க வைக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன் அவர் இரண்டாம் இடத்திற்கான பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கிய காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் முடிவுக்குப் பின் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், 'உங்களது கண்ணீர் எங்களது கண்ணீர் தலைவர்! நீங்கள் எங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சிக்கு நன்றி' என லியோனல் மெஸ்ஸிக்கு ஆதரவாக உருக்கமான பதிவொன்றை வெளியிட்டிருந்தது.

Bootstrap