தென் அமெரிக்க நாடான கயானாவின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்குச் நேற்று முன் தினம் சென்ற சிறிய ரக கப்பல் ஒன்று நடுக்கடலில் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நடந்த சமயத்தில் கப்பலில் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 133 பேர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உட்பட 67 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கடலில் மூழ்கி மாயமான மீதமுள்ள 66 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக்குழுவினர் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.