புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தலைமைத்துவம் தேவை எனத் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவி கருணாநாயக்க இதனைக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளையும், நுகர்வோரையும் திருப்திப்படுத்தும் விதம் குறித்து அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் சிந்திக்க வேண்டும் என கருணாநாயக்க குறிப்பிட்டார்.
நாடு ஒரு தீர்க்கமான கட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகக் கூறிய கருணாநாயக்க, நெல் விலை தொடர்பில் உறுதியான தீர்வு இருக்க வேண்டும் என்றார்.
தமிழ் கட்சிகள் ஒன்றுபடுகின்றன என்று கூறப்பட்டாலும், எங்கு ஒன்றுபடுகின்றன என்பது குறித்துக் கூறப்படவில்லை எனத் தெரிவித்த ரவி கருணாநாயக்க, மக்களின் வெற்றிகளை கட்சிகள் ஒன்றிணைவதன் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.