உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளம் ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. கோல்டன் லியோ வணிகக் கப்பல் மீது ரஷ்யா 3 'க்ரூஸ்' ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதேவேளை, கப்பலில் இருந்த 17 மாலுமிகளுள் 8 பேர் மீட்கப்பட்டதுடன், படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்திற்குத் தடையானது என்றும், இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

கருங்கடல் பகுதியில் உக்ரைன் - ரஷ்யா இடையே பரஸ்பரம் எண்ணெய் மற்றும் தானியக் கப்பல்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

Bootstrap