அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிப்பதாக அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ உத்தரவு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போரின் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது
அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள், வாகனப் பாகங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கனடா அரசு நியாயமற்ற முறையிலும், பாகுபாட்டுடனும் வரிகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்தைப் பாதிப்படையச் செய்துள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புதிய 50 சதவீத வரி விதிப்பானது ட்ரம்ப் கையெழுத்திட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு, அதாவது 2026 ஆகஸ்ட் 19 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது.
அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கப் பொருட்களுக்கு நிகரான வரிகளை விதிக்க கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இரு நாடுகளின் பொருளாதார உறவிலும், உலகளாவிய வர்த்தகச் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றன.