பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் - நீதி அமைச்சர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக, புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

'புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும்' என அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் நானயக்கார மேலும் விளக்கமளித்தார்.

பிணை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு அல்ல என்றும், இதுபோன்ற விவகாரங்களில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Bootstrap