கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதுடன்,100 பேர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவரகளை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.