மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று (21) தொடர்ந்து 10ஆவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டபோது, இதற்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. மேலும், அவ்வழியாகச் சென்ற மசகு எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று தொடரும் இந்த வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களான பண்டர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க் ஈசிரிக் ஆகிய பகுதிகள் தீவிரமாகச் சேதமடைந்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்த விவரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமும் அமைதியின்மையும் நீடித்து வருகின்றது.