2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தேசிய கால்பந்து அணி, வெற்றிக் கிண்ணத்துடன் தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளது.
நாட்டை வந்தடைந்த வீரர்களுக்கு அந்நாட்டு இரசிகர்கள் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர்.
அத்துடன், வெற்றியடைந்த வீரர்கள் உலகக்கிண்ணத்தை திறந்தவெளிப் பேருந்தில் சென்று நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர்.
இந்தத் வெற்றி அணிவகுப்பைக் காணவும், வீரர்களை வாழ்த்தவும் இலட்சக்கணக்கான ஸ்பெயின் இரசிகர்கள் வீதிகளின் இருபுறமும் திரண்டு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.