செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450ஆக உயர்வடைந்துள்ளது. 92 நாட்களாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் ஊடாக 454 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்ட கால்களை குறுக்காக மடக்கிய நிலையில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.