24-ஆவது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2030 ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் ஜூலை 21 வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தற்காலிக அட்டவணையை வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக 44 நாட்கள் நீடிக்கும் மிக நீண்ட தொடராக இது அமையவுள்ளது.
உலகக்கோப்பையின் 100-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நூற்றாண்டு விழா மற்றும் முதல் சுற்றுப் போட்டிகள் தென் அமெரிக்காவில் தொடங்கும்.
மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் முதன்மைப் போட்டிகள் ஆரம்பமாகும்.
வரலாற்றில் முதல் முறையாக 3 கண்டங்களைச் சேர்ந்த 6 நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடந்து முடிந்த 23ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியை ஸ்பெயின் நாட்டு இரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.