மர்ம மரணங்கள் சர்வதேச விசாரணை அவசியம்: பிரேம்நாத் சி.தொலவத்த

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மர்ம மரணங்கள் குறித்து முறையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் சந்தேகத்திற்குரிய மற்றும் மர்மமான மரணங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சர்வதேச அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் இவ்வாறான மர்ம மரணங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது குறித்து அரசாங்கம் முறையான கவனத்தை செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பிரேம்நாத் சி. தொலவத்தவின் இந்த அறிக்கை, தற்போதைய நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்த அரசியல் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

Bootstrap