சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல நகைக் கடையில், 4.95 கெரட் மதிப்புள்ள வைரத்தை திருடிவிட்டு, அதற்குப் பதிலாக போலி வைரத்தை மாற்றி வைத்துவிட்டுத் தப்பியோடிய இரு இந்திய சுற்றுலாப் பயணிகளை சிங்கப்பூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த இருவரும் இந்தியாவுக்குச் செல்ல முயன்றபோது,சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேக நபரொருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மற்றொருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் சிங்கப்பூர் நகை வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.