மனிதன் முதன்முதலாக நிலவில் கால் பதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று (ஜூலை 21) நினைவுகூரப்படுகிறது.
1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதிஇ அமெரிக்காவின் 'அப்பல்லோ 11' விண்கலத்தின் மூலம் விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் வெற்றிகரமாகக் காலடி வைத்தனர். நிலவில் காற்றோ அல்லது மழையோ இல்லாததால், அன்று அவர்கள் பதித்த காலடித்தடங்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு அப்படியே அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதன் மூலம் நிலவில் மனிதன் மேற்கொண்ட முதலாவது பயணம் என்ற வரலாற்றுச் சாதனை பதிவானது.
'மனிதனுக்கான ஒரு சிறிய காலடி, மனிதகுலத்திற்கான மிகப்பெரிய முன்னேற்றம்' என நீல் ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்த அந்த தருணம், உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்தச் சாதனை அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் புதிய பாதைகளைத் திறந்ததுடன், மனித குலத்தின் மிகப்பெரும் மைல்கற்களில் ஒன்றாகவும் இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.