அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.

அரிக்காவும், சவூதி அரேபியாவும் அமைதியான குடிமக்கள் பயன்பாட்டிற்கான  வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய அணு உலைகளைக் கட்டுவதற்கும், யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது.

அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட்  மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 30 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சவுதி நிலப்பரப்பில் அணு மின் நிலையங்களை அமைத்து இயக்கவுள்ளன.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிலும், மத்திய கிழக்கின் முக்கிய பங்காளியான இஸ்ரேலிலும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு ஐக்கிய அரபு இராச்சியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் மிகவும் கடுமையான ஆய்வுக் கட்டுப்பாடுகளையும், சொந்தமாக அணு எரிபொருள் உற்பத்தி செய்யும் உரிமையற்ற தன்மையையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளரான மார்க்கோ ரூபியோ , உலகளவில் அணு ஆயுதப் பரவலுக்கான எந்தவொரு ஆபத்தையும் விளைவிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா ஈடுபடாது எனத் தெரிவித்தார்.

Bootstrap