மானிப்பாய் - சுதுமலை வீதியில் விபத்து : பெண்ணொருவர் பலி

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த சுதுமலை, தாவடி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண், சுன்னாகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Bootstrap