கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்கள் இடையே மோதல்

கொழும்பு துறைமுக நகரில் (Port city) அதிகாலை வேளையில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மற்றொரு சீன நாட்டவரை எதிர்தரப்பினர் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு கருவி ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இது குறித்து கொழும்பு துறைமுக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Bootstrap