எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் ஆரம்பம்

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் நடத்தப்படும் இக்கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bootstrap