கொழும்பு தெமட்டகொடயில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இன்று மாலை (ஜூலை 23, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்து, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு ஆயுததாரிகளால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கான பின்னணி காரணம் என்ன என்பது குறித்து கண்டறியவும், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்யவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Bootstrap