முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோது, பிள்ளையான் தொலைக்காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
T-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.