சிறையில் இம்ரான் கான் உடல்நிலை மோசம்- சர்வதேச நாடுகளுக்கு மகன் உருக்கமான வேண்டுகோள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 73), சுமார் 1,100 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் நிலையில், அவரது உடல்நிலையும், கண்பார்வையும் தொடர்ந்து மிகவும் மோசமடைந்து வருவதாகத் கூறி அவரது மகனான காசிம் கான் சர்வதேச நாடுகளுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இருப்பினும், அவரை நேரில் சென்று பார்க்கக் குடும்பத்தினருக்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து வருகின்ற அதேவேளை, பல்வேறு வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

என் தந்தைக்கு உடனடியாக அவசர வைத்திய உதவி தேவைப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு அவருக்கு உரிய வைத்திய சிகிச்சையை வழங்க மறுத்து வருகின்றதாகவும், அதனால் என் தந்தையின் உயிரைக் காப்பாற்ற அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் அரசுக்குச் சர்வதேச நாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் காசிம் கான் கூறியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ராவல்பிண்டியிலுள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது மகனின் கோரிக்கை தற்போது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று வருகின்றது.

Bootstrap