நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (25) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படிஇ ஜூலை மாதத்தில் நேற்று (24) வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,530 ஆகப் பதிவாகியுள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றவும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி வைத்திய ஆலோசனையைப் பெறவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.