அமெரிக்கா, இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவரானார் வோல்கர் டர்க்

ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி இரண்டாவது முறையாக மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவைச் சேர்ந்த வழக்கறிஞரான வோல்கர் டர்க் உள்ளார். இவருடைய பதவிக் காலம், வரும், அக்.இ 11ல் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ஐ.நா சபையில் நேற்று நடந்தது.

ஐ.நா. பொதுச் செயலர் அன்டனியோ குட்டரெஸ், அவரை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க பரிந்துரை செய்தார்.

வழக்கமாக வெளிப்படையாக அறிவித்து விவாதித்து தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாறாக, தற்போது ரகசியமான முறையில் இந்த நியமனம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஐ.நா.இ பொதுச்சபையில் உள்ள 193 நாடுகளில், 144 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 13 நாடுகள் நடுநிலை வகித்தன.

இப்பதவியை நீட்டிக்கும் முறை சரியில்லை என்றும், வெளிப்படை தன்மை இல்லை என்றும் கூறி அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ஐ.நா.வுக்கு வழங்கும் நிதியுதவி மற்றும் பங்கேற்பை மறுபரிசீலனை செய்வோம் என எச்சரித்தது.

இதேபோல், காசா போர் தொடர்பாக மேற்காசிய நாடான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை வோல்கர் டர்க் கடுமையாக விமர்சித்திருந்தார். அதனால் அவருடைய பணி நீட்டிப்பிற்கு, இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்தது.

இறுதியில், ஐ.நா. விதிகளின்படியே பொதுச்செயலர் முடிவு ஏற்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. விளக்கம் அளித்துள்ளது.

கடந்த, 1993ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை யாரும் தலைவர் பதவியை தொடர்ந்து இரண்டு முறை வகித்ததில்லை என்பதால், வோல்கர் டர்க் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

 

Bootstrap