கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 9ஆம் திகதி மாலை 6.44 மணியளவில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத் தலைநகரான எட்மண்டனின் சில்வர் பெர்ரி பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் அசைவின்றிக் கிடப்பதாக பொலிசாருக்கு அவசர அழைப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார், பலத்த காயங்களுடன் சுயநினைவிழந்த நிலையில் இருந்த தமன்பிரீத் கௌர் (23) என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஜூலை 12ஆம் திகதி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த தமன்பிரீத் கௌர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், கௌரின் கணவரான ரித்திஷ் குமார் (22) என்பவரை ஜூலை 22ஆம் திகதி கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.