டிரம்பின் 50% வரி விதிப்பு : ஆல்பர்ட்டா பிரதமரின் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கனடா பொருட்களுக்கு விதித்துள்ள 50% கூடுதல் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ளப் பொறுமையுடனும், அரசுதந்திர  ரீதியிலும் செயல்பட வேண்டும் என்று ஆல்பர்ட்டா மாகாண பிரதமர் டேனியல் ஸ்மித்  தெரிவித்துள்ளார்.

கனடா உடனடியாகப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவதை விட, அமெரிக்கர்களுடனான பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதே சிறந்தது என்பது அவரது நிலைப்பாடாகும்.

பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முன்பே எதிரியைத் தாக்குவது போல் செயல்படாமல்,அமைதியான முறையில் அரசுதந்திரத்தைப் பயன்படுத்தி 100% வரி இல்லாத வர்த்தக உறவை நிலைநாட்ட உழைக்க வேண்டும்.

ஒண்டாரியோ மாகாண பிரதமர் டக் ஃபோர்ட், கனடா இதற்குப் பதில்டியாக அமெரிக்க எண்ணெய் மற்றும் பொட்டாஷ் மீது வரி விதிக்க வேண்டும் எனக் கூறியதை ஸ்மித் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.ஆல்பர்ட்டாவிலிருந்து வயோமிங்கிற்கு தினசரி 550,000 பேரல் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் பிரெய்ரி கனெக்டர் குழாய்த்திட்டத்திற்கு இரு நாடுகளிலும் அனுமதி கிடைத்துள்ளதால், இந்த வரி விதிப்பால் அதற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த விவகாரத்தை உரிய தீவிரத்தோடு கையாள்வதாகவும், ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் சுமுக ஒப்பந்தம் எட்டப்படும் எனத் தான் நம்புவதாகவும் ஸ்மித் கூறியுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்க கனடா பிரதமர் மார்க் கார்னியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் வரவிருக்கும் வாரங்களில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

Bootstrap