தெற்கு சீனாவில் 'நௌல்' சூறாவளி கனமழை - 10 பேர் உயிரிழப்பு

தெற்கு சீன மாகாணமான குவாங்டாங்கில் சூறாவளியுடன் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 12ஆவது மற்றும் மிக வலிமையான சூறாவளியான இதுவாகும். குவாங்டொங் மாகாணத்தின் ஹுய்சோ நகரில் நேற்று (26) அதிகாலை 3:50 மணியளவில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் கரையைக் கடந்துள்ளது.

இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டொங் மாகாணத்தில் மட்டும் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், அதிவேக ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சீன தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரண திணைக்களம் குவாங்டொங் மாகாணத்திற்காக நான்காம் நிலை அவசர நிவாரண நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கவும் உதவிக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது

 

Bootstrap