அமெரிக்க நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சியாட்டில் நகரில் உள்ள ஸ்பேஸ் நீடில் அருகே உள்ள அரங்கு ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இதில் இரண்டு பேர் பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.