மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வந்தாலும், புதிய பணிகளுக்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். அந்நியர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் நிலவும் சிறு பிரச்சனைகளை நிதானமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அது நிறைவேறும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமச் சிவப்பு ஃ ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்குச் சுமாரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் பழைய விவகாரங்களால் விவாதங்கள் எழலாம் என்பதால், சொத்து சம்பந்தமான விஷயங்களில் யோசித்து நிதானமாகப் பேசுவது அவசியம். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்க்காத ஆச்சரியமான பரிசுகள் கிடைக்கக்கூடும். இறை வழிபாடு மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு , சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
மிதுன ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்குக் கலவையான பலன்களைத் தரும். சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று நற்பெயர் பெறுவீர்கள். தாயார் அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம். வீண் சிந்தனைகளைத் தவிர்ப்பது மன தெளிவைத் தரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை ஃ ஆகாய நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்குச் செல்வம் பெருகும் நன்னாளாகும். திட்டமிட்ட வணிக இலக்குகள் முன்கூட்டியே நிறைவேறி மகிழ்ச்சி தரும். நிதி நிலைமை முன்பை விடச் சிறப்பாக இருக்கும். மனதளவில் உற்சாகமும் உல்லாசமும் நிறைந்திருக்கும். புதிய வேலைகளை யோசித்துத் தொடங்குவதுடன், பணிகளில் தவறுகள் நேராமல் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி நிறம் ஃ க்ரீம்
அதிர்ஷ்ட எண்: 2
சிம்ம ராசிக்காரர்களே, பிள்ளைகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு மனம் மகிழ்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடுவீர்கள். தொழில் மற்றும் பணியிடத்தில் நெருங்கியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கு இருந்த தடைகள் யாவும் விலகும். சில குடும்பப் பிரச்சனைகள் வந்து சென்றாலும் உங்களின் மன உறுதி உங்களைக் காப்பாற்றும்.
அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம் ஃ அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களைச் சுற்றியுள்ள சூழல் மிகவும் இனிமையாகவும் சுபமாகவும் இருக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பணியிடத்தில் உங்களின் திறமைக்குத் தகுந்த நல்ல பெயரும் பாராட்டும் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மரப்பச்சை ஃ எலுமிச்சை மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்ப மூத்த உறுப்பினர்களின் முழு ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். அந்நியர்களை நம்பாமல் உங்கள் பணிகளில் முழு கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் ஃ வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீண்ட நாளாக ஆட்டிப்படைத்த சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் நீங்கள் வகுத்த புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி நிம்மதி தரும். புதிய வாகனம் வாங்கும் எண்ணமும் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன் ஃ அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களை வாட்டிய கடன் தொல்லைகள் அகலும் இனிய நாளாகும். குடும்பத்தினரிடம் இருந்து மனதிற்குப் பிடித்த நற்செய்திகளைக் கேட்பீர்கள். தொழில் நிமித்தமாகச் குறுகிய தூரப் பயணங்கள் செல்ல நேரிடலாம். உங்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறும். இறை வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும்; மறைமுக எதிரிகளிடம் மட்டும் சற்று விழிப்புடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: தங்க மஞ்சள் ஃ குங்குமப்பூ நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
மகர ராசிக்காரர்களே, இன்று நிதியியல் மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொறாமை குணமுடைய மனிதர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு முன்பாகத் துறை சார்ந்த அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் ஆலோசனையைப் பெறுவது நன்மையைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் ஃ கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 5
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்குப் பல வழிகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சாதகமான நற்செய்தி வந்து சேரும். பயணங்களின் போதும், வாழ்க்கைத் துணையின் உடல்நலத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2
மீன ராசிக்காரர்களே, உத்தியோகத்தில் உங்களின் திறமையான உழைப்பிற்கு விருதுகளோ பாராட்டுக்களோ கிடைக்கக்கூடும். குடும்பப் பிரச்சனைகள் குறித்துப் பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவது தீர்வு தரும். வரவுக்கும் செலவுக்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரிப்பது அவசியமாகும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள் ஃ சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 9