சுரேஷ் சலேவின் ரிட் மனு நாளை மீண்டும் பரிசீலனை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைப் பொலிஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்த ரிட் மனுவை நாளை (28) மீண்டும் அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்றைய தினம் (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் நீண்ட விவாதங்களை முன்வைத்தார்.

அதற்கமைய, இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டக் கருத்துக்களைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், மனுவை நாளை மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையான திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

Bootstrap