பிரான்சில் உக்கிரமடையும் காட்டுத்தீ

பிரான்சின் தென்மேற்கு பகுதியிலுள்ள Bordeaux  நகரில் உக்கிரமடைந்து வரும் காட்டுத்தீ தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோன் இடர் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

அதிக உஷ்ணம் காரணமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமம் ஏற்ப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் பல இடங்களில் காட்டுத் தீ அபாயம் அதிகரித்துச் செல்கிறது.

இதில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் அனர்த்தம் காரணமாக இதுவரை 330,000 மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap