கனடாவில் சிறையிலிருந்து தப்பிய கைதி

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள தண்டர் பே சீர்திருத்த மையத்திலிருந்து (Thunder Bay Correctional Centre) தப்பியோடிய 65 வயதான கைதி அந்தோணி பேட்ரிக் பிரிஸெல்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 24, 2026 அன்று அந்தோணி பிரிஸெல் சிறையிலிருந்து தப்பியோடியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அவர் தப்பியதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை 61 (Highway 61)  மற்றும் நகரின் தெற்குப் பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் யாரும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு  காரில் புகலிடம் அளிக்க வேண்டாம் என Thunder Bay Police Service எச்சரிக்கை விடுத்தது.

தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தப்பிய 9.5 மணி நேரத்திற்குள், அதாவது ஜூலை 25 அதிகாலை 1:30 மணியளவில் Ontario Provincial Police (OPP) உதவியுடன் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

எனினும்இ கைதி ஃபிரிஸ்செல் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார், அவர் சிறையிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான மேலதிக விவரங்களைக் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bootstrap