சர்வதேச நிதி நிறுவனம் (IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகளவில் வேகமாக முன்னேறி வரும் (Fastest-Improving) நாடுகளில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு 37.33 ஆக இருந்த இலங்கையின் முதலீட்டாளர் உறவுகளுக்கான மதிப்பெண், 2026 இல் 43.67 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் கடன் மேலாண்மை மற்றும் நிதி ஆளுகையில் ஏற்பட்டுள்ள வெளிப்படைத்தன்மையே இந்த 6.3 புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாகும்.
இப்பட்டியலில் வியட்நாம் முதலாவது இடத்தையும், பெலிஸ் (Belize) இரண்டாம் இடத்தையும், மொசாம்பிக் (Mozambique) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
உலகளாவிய கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) குறியீட்டிலும் இலங்கை 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் (GDP Growth) அல்லாமல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள அதிவேக முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீடாகும்.