ஜப்பானில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ  மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்டிருந்தது.

கடலோரப் பகுதிகளில் 1 மீட்டர் (3.28 அடி) உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என்பதால் அவசர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. ஒரு வணிக வளாகக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் சிலர் உள்ளே சிக்கியுள்ளனர். மின்சாரம் மற்றும் இரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள அணுமின் நிலையங்களில் தற்போதைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது

Bootstrap