பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா மலேசியாவில் கைது!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ரத்மலானே சைமா' என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாட்டிலிருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை இயக்கிய முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இவரது போதைப்பொருள் வலைப்பின்னல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்ததாகவும், அதில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bootstrap