ஜேர்மனி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதியை சுமார் 800 மில்லியன் யூரோக்களாக கணிசமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த 20 மாதங்களில் வழங்கப்பட்ட மொத்த அனுமதிகளை விட அதிகமாகும் என்று ஜேர்மன் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஏற்றுமதி அனுமதிகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பு, ஒரு பெரிய கடற்படை கப்பல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது TKMS நிறுவனம் தயாரித்த, அணு திறன் கொண்ட INS Drakon வகை நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பெரும்பாலான ஆயுத ஏற்றுமதி அனுமதிகள் 2026 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழங்கப்பட்டுள்ளன. காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் நிலவும் சூழல்களுக்கு மத்தியில், ஜேர்மனியின் இந்த அதிரடி ஆயுத விநியோக அதிகரிப்பு சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், அரசியல் ஆய்வாளர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.