உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் 2025-2027 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலியா முதலிடத்தை பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்து மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என்பன 4ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரையில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிய அணி புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிகளைப் பொறுத்தவரையில், வெற்றிகளுக்கு 12 புள்ளிகளும், சம முடிவுகளுக்கு 6 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

வெற்றி தோல்வியில்லாத முடிவுகளுக்கு 4 புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

குறைந்த ஓவர் வீச்சு விகிதத்திற்காக அணிகளின் புள்ளிகள் குறைக்கப்படலாம்.

இந்தநிலையில், லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2027 இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறவுள்ளன.

 

Bootstrap