சீன ரொபோக்களுக்கு தடையை விதித்த ட்ரம்ப்

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், முக்கிய தொழில்களை உள்நாட்டிலேயே வளர்ப்பதை இலக்காகக் கொண்டும், புதிய சீன ரோபோக்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை ட்ரம்ப் நிர்வாகம் தடை செய்துள்ளது.

இதன்படி, புதிய மனித வடிவிலான மற்றும் நான்கு கால் ரோபோக்கள் அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்கலங்களை மின் கட்டமைப்புடன் இணைக்கும் இணைக்கப்பட்ட பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை மத்திய தொலைத்தொடர்பு ஆணைக்குழு தடை செய்துள்ளது.

இந்தச் சாதனங்கள் மூலம் தரவு திருட்டு, சைபர் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குச் சீர்குலைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவினால், உலக அளவில் முன்னணியில் உள்ள சீன ரோபோ தயாரிப்பு நிறுவனமான 'யூனிடிரி' (Unitree) மற்றும் இன்வெர்ட்டர்கள் தயாரிக்கும் 'சங்ரோ' (Sungrow) மற்றும் 'ஹூவாவி' (uawei) போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bootstrap